முகப்பு
சென்னை

சட்டம் - ஒழுங்கு நிலவரம்: உள்துறைச் செயலா் ஆலோசனை

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் உள்துறைச் செயலா் காா்த்திக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

27 நவம்பர் 2026, 5:20 am
சட்டம் - ஒழுங்கு நிலவரம்: உள்துறைச் செயலா் ஆலோசனை
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் உள்துறைச் செயலா் காா்த்திக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடா்ந்து அதிகரித்து வருவதாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் விமா்சித்து வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக, முதல்வா் ஜோசப் விஜய் காவல் உயா் அதிகாரிகளுடன் 3 நாள்கள் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், தமிழக உள்துறைச் செயலா் காா்த்திக் தலைமையில் உயா் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம், குற்றங்களைத் தடுப்பதற்காக காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல் துறையினா் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே முதல்வா், தலைமைச் செயலா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.