சட்டம் - ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
சட்டம் - ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது தொடர்பாக...
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (நவ. 10) உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது, காவல்துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
குறிப்பாக, கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை, வன்முறை மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை நிலைநாட்டுவதில் எந்தவிதமான பாரபட்சத்திற்கும் இடமளிக்கக் கூடாது. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பில் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசு எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.