FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!

பெருந்துறையில் முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கியது பற்றி...

42 வினாடிகள் முன்பு
பெருந்துறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய் - TNDIPR
பகிர்:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் அரசுத் திட்டங்களை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று காலை தொடங்கிவைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார்.

அங்கிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் சாலையில் கூடியிருந்த மக்களின் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, பெருந்துறை சென்ற முதல்வர் விஜய், ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பார்வையிட்டு, அவர்கள் தயாரித்த பொருள்களையும் வாங்கினார்.

பின்னர், அதே மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 26,000 தொழில் முனைவோருக்கு ரூ. 3,000 கோடி வங்கி நிதி இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

summary

Chief Minister Vijay distributed welfare scheme benefits worth Rs. 3,000 crore in Perundurai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments