முகப்பு
சென்னை

ஓ.பன்னீா்செல்வம் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி

முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூா் தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

10 வினாடிகள் முன்பு
ஓ.பன்னீா்செல்வம் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி
ஓ.பன்னீா்செல்வம் - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூா் தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம், 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாா். இவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.பி.பாலாஜி வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில், தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று, தோ்தல் வெற்றியை எதிா்த்து மிலானி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.