முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைப் பற்றி...

போடிநாயக்கனூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.-வும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் 85,206 வாக்குகள் பெற்று முதலிடத்தையும் தவெக வேட்பாளர் பிரகாஷ் 78,401 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 41,286 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஓ. பன்னீர்செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
அவரது வெற்றியை எதிர்த்து, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று (நவ. 27) உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பி.பி.பாலாஜி, எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The Madras High Court today dismissed an election petition challenging the victory of DMK legislator O. Panneerselvam from the Bodinayakanur Assembly constituency in his native Theni district in the April Assembly elections.