முகப்பு

மானாமதுரை தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி: திமுக வேட்பாளர் மனுவுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

23 வினாடிகள் முன்பு
மானாமதுரை தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி: திமுக வேட்பாளர் மனுவுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)
பகிர்:

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், 69,971 வாக்குகள் பெற்று 1,208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன்

மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன்இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டு, 68,763 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த திமுக வேட்பாளர் தமிழரசி, இளங்கோவனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்து, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் தமிழரசி தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் பதிலளிக்கும்படி, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிச. 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

summary

The Madras High Court has dismissed a petition filed by Ilangovan, the TVK MLA for the Manamadurai constituency, seeking the rejection of an election case filed against him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.