FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகன் செப்டம்பர் 30 ஆம் தேதி, தனது சாட்டை யூடியூப் சேனலில் வெளியிட்ட விடியோவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், கருத்துகள் தெரிவித்திருந்ததாகக் கூறி, தவெக நிர்வாகி ஒருவர் சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சாட்டை துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

அந்த மனுவில், விடியோவில் யாருக்கும் எதிராக எந்த அவதூறும் ஏற்படுத்தவில்லை என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ், சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

summary

Anticipatory bail for Saattai' Duraimurugan: Madras High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.