மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறு! நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து...
மாநிலத்தில் மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தினசரி புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இதனிடையே, சென்னை பெரம்பூர் அருகே தன்னுடைய வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்களால் இடையூறு ஏற்படுவதாகவும், மது விற்பது மட்டும் டாஸ்மாக்கின் வேலை அல்ல; மது அருந்துபவர்களால் ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதும் டாஸ்மாக்கின் வேலைதான் என சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்நாதன், வீடுகளின் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சென்னை வடக்கு காவல் மாவட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? இதுகுறித்த அறிக்கையைக் காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Chennai High Court questioned what measures are being taken to prevent disturbances caused by those consuming alcohol
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.