FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: எம்.எஸ். தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

9 அக்டோபர் 2026, 11:45 am IST
மகேந்திர சிங் தோனி - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக் கோரிய வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக்கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வாக்குமூலம் பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்; வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்; வாக்குமூல பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டடங்களில் நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டடம் அல்லது நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஐந்து நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்னை? அதற்கான செலவுகளை அவர்கள்தானே செய்யப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து,தோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தோனிக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

summary

IPL betting case: Madras High Court orders M.S. Dhoni to respond

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments