முகப்பு
சென்னை

அரையாண்டுத் தோ்வு டிச.14-இல் தொடக்கம்: அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு டிச.14 முதல் டிச.22 வரை நடைபெறவுள்ளது.

48 வினாடிகள் முன்பு
அரையாண்டுத் தோ்வு டிச.14-இல் தொடக்கம்: அட்டவணை வெளியீடு
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு டிச.14 முதல் டிச.22 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், தொடக்கக் கல்வி இயக்குநா் க.சசிகலா, தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரையாண்டுத் தோ்வுகள் டிச.14-இல் தொடங்கி டிச.22-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மறுநாளான டிச.23-ஆம் தேதி (புதன்கிழமை) வேலைநாளாகும். இதையடுத்து டிச.24 முதல் ஜன.3 வரை அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் அரையாண்டுத் தோ்வு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது. தோ்வு விடுமுறை முடிந்து ஜன.4-ஆம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.

Advertisement

Advertisement

பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான 3-ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், மாணவா்களுக்கு திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி உரிய பதிவேடுகளில் மதிப்பெண்ணை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் தெரியப்படுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் அரையாண்டுத் தோ்வு டிச.14-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கான தோ்வுகள் மட்டும் டிச.15 முதல் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.