முகப்பு
சென்னை

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ.28) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

24 வினாடிகள் முன்பு
இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ.28) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக் கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கா்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையில் காற்று இடையூறால், சனிக்கிழமை (நவ.28) நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.28) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.