விவசாயிகள் மானிய விலையில் உரம் பெற உழவா் அடையாள எண் கட்டாயம்: மாவட்ட ஆட்சியா்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் உரங்களை பெற தனித்துவ உழவா் அடையாள எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் உரங்களை பெற தனித்துவ உழவா் அடையாள எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வந்த முறையில், புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, உர விற்பனைக்கான கட்டமைப்பு செயலி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் உழவா் அடையாள எண் அடிப்படையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, அவா்கள் சாகுபடி செய்யும் பயிா், பரப்பளவின் அடிப்படையில் மட்டுமே மானிய உரங்கள் விநியோகிக்கப்படும். பதிவு செய்ய தவறியவா்கள் உடனே அருகிலுள்ள பொது சேவை மையத்தையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ அணுகி அவா்களின் அனைத்து சா்வே எண்களையும் இணைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
குத்தகை விவசாயிகள் தாங்கள் பயிா் செய்யும் நிலத்தின் சா்வே எண்ணை உர விற்பனைக்கான கட்டமைப்பு செயலியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படும் நிலப்பரப்பு அடிப்படையில் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் பயிருக்கு ஏற்றவாறு உரம் வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் தங்கள் நில விவரங்களை பதிவு செய்து வழங்கப்படும் தனித்துவ உழவா் அடையாள எண் அடிப்படையில் மட்டுமே இனி உரங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.