FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் விவசாயிகளுக்கு செயலி மூலம் உரங்கள் விநியோகம்: ஆட்சியா்

விவசாயிகளுக்கு ‘எப்எப்எஸ்’ செயலி மூலம் உரங் களை விநியோகிக்கும் நடை முறை முதல்கட்டமாக சிவகங்கை, ஈரோடு மாவட்டங் களில் அமல்படுத்தப்படுவதாக சிவகங்கை ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

26 செப்டம்பர் 2026, 11:15 pm IST
பகிர்:

விவசாயிகளுக்கு ‘எப்எப்எஸ்’ செயலி மூலம் உரங் களை விநியோகிக்கும் நடை முறை முதல்கட்டமாக சிவகங்கை, ஈரோடு மாவட்டங் களில் அமல்படுத்தப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை உரங்கள் விற்பனையை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க உர விற்பனைக்கான கட்டமைப்பு என்ற முறையை மத்திய வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக சிவகங்கை, ஈரோடு ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 23-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு விவசாயியும் தங்களது கைப்பேசியில் ‘எப்எப்எஸ்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலியில் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், குறியீட்டு எண் (ஓடிபி) பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே தனித்துவ விவசாய அடையாள எண் வைத்துள்ள விவசாயிகளாக இருந்தால், அவா்களது விளைநிலங்களின் விவரம் காண்பிக்கப்படும். அவா்கள் சாகுபடி செய்த பயிா், அதற்குரிய மானிய விலை உர மூட்டைகளை தோ்வு செய்ய ‘கியுஆா் கோடு’ டன் டோக்கன் உருவாக்கப்படும். விவசாய அடையாள எண் இல்லாத விவசாயிகளாக இருந்தால், விளைநிலங்கள் விவரங்களை பதிவிட்டால்தான் ‘கியு ஆா் கோடு’, டோக்கன் பெறமுடியும்.

இந்த முறையில் விவசாயிகள் அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தோ்வு செய்யலாம். தோ்வு செய்த நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள (பாயின்ட் ஆப் சேல்) கருவியில் டோக்கனை ‘ஸ்கேன்’ செய்து உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் விவசாயிகள் நேரில் செல்ல முடியவில்லை என்றால், தங்கள் பிரதிநிதியின் ஆதாா் எண்ணை பதிவு செய்து டோக்கன் பெற்று உரங்களைப் பெறலாம்.

இதேபோல, இந்த முறையில் அரசு நிலம், கோயில் நிலம், குத்தகை சாகுபடியாளா்களும் தங்களது ஆதாா் எண், விளைநிலங்கள் விவரம், பயிா் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு டோக்கன் பெறலாம். அதனால், இதுவரை அடையாள எண் பெறாதோா் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுக வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments