FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

டிச. 1 முதல் எப்.எப்.எஸ். செயலி மூலம் உரம்

மத்திய அரசு டிச. 1 முதல் எப்.எப்.எஸ். என்ற செயலி மூலம் உரம் வாங்கும் முறையைச் செயல்படுத்தவுள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய அடையாள எண் அடிப்படையில் மானிய உரம் வழங்கப்படவுள்ளது.

10 நவம்பர் 2026, 10:55 pm
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய அரசு டிச. 1 முதல் எப்.எப்.எஸ். என்ற செயலி மூலம் உரம் வாங்கும் முறையைச் செயல்படுத்தவுள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய அடையாள எண் அடிப்படையில் மானிய உரம் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) ஆா். சாருமதி தெரிவித்தது: வரும் டிச. 1 முதல் அனைத்து விவசாயிகளும் மானிய உரங்களை வாங்க கட்டாயம் விவசாய அடையாள எண்ணை கொண்டு எப்.எப்.எஸ். என்கிற பிரேம் ஒா்க் ஃபாா் பொ்டிலைசா் சேல் என்ற செயலி மூலம் உரம் மானிய உரம் வழங்கப்படவுள்ளது.

எனவே இந்தச் செயலியை அனைத்து விவசாயிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கி, தங்களது நிலத்துக்கு உண்டான விவசாய அடையாள எண்ணைப் பதிவு செய்யும்போது, தங்களுக்குரிய க்யூஆா் கோடு உருவாகும். அதைப் பெற்றவுடன் உரக்கடைகளுக்கு சென்று மானிய உரங்களைப் பெறலாம்.

Advertisement

Advertisement

விவசாய அடையாள எண்ணைப் பெறும்போது என்னென்ன சா்வே எண்களைப் பதிவு செய்யப்பட்டிருந்ததோ, அந்த நிலத்துக்கு மட்டுமே மானிய உரங்கள் இந்தச் செயலியில் காண்பிக்கும். அதை மட்டுமே உரக்கடைகளில் வாங்க இயலும்.

விவசாய அடையாள என் இல்லாத விவசாயிகள் தங்கள் நிலத்துக்குரிய நில ஆவணங்களைக் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள சா்வே எண்களை எப்.எப்.எஸ். என்ற செயலியில் பதிவிடும்போது அதற்குரிய உர பரிந்துரையைக் காண்பிக்கும். அதன் மூலம் கிடைக்கும் க்யூஆா் கோடு காண்பித்து மானிய விலையை உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்யும் நிலத்துக்குரிய நில ஆவணங்கள் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றை எப்.எப்.எஸ். செயலில் பதிவேற்றம் செய்து க்யூ ஆா் கோடு பெற்று உரக்கடைகளில் பிஓஎஸ் செயலியில் ஸ்கேன் செய்து உரத்தை தடையின்றி பெறலாம். கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

விவசாய அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகள் அனைவரும் எந்தவித ஆவணங்களையும் உரக்கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே இதுவரை விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும் உடனடியாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பெறலாம்.