FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் செயலி மூலம் உரம் விற்பனை அமலானது

புதுச்சேரியில் செயலி மூலம் பதிவு செய்தே உரங்களை பெற முடியும் என்ற முன்னோடி திட்டம் செவ்வாய்க்கிழமை அமலானது.

உரம் - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் செயலி மூலம் பதிவு செய்தே உரங்களை பெற முடியும் என்ற முன்னோடி திட்டம் செவ்வாய்க்கிழமை அமலானது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை குறைப்பதற்கும், மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு திருப்பி விடப்படுவதை தடுப்பதற்கும் நாடு முழுவதும் விற்பனை மற்றும் பயன்பாட்டு முறையை உர விற்பனைக்கான கட்டமைப்பு முன்னோடி திட்டம் அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலா் ரவி கூறியதாவது:

Advertisement

Advertisement

விவசாயத்தில் உரம் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இனி விவசாயிகள்

நினைத்த நேரத்தில் உரம் எடுக்க முடியாது. புதுச்சேரி வேளாண்மை துறையின் முடிவால் 3 மணி நேரம் கடையில் போய் நின்று ஆப் மூலம் செயலி இறக்கி பதிவு செய்து உரம் எடுக்க வேண்டிய முறை ஏற்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments