முகப்பு
சென்னை

குடும்ப வன்முறை வழக்கு: அமைச்சர் வெங்கடரமணன் டிச. 5-ல் நேரில் ஆஜராக உத்தரவு!

குடும்ப வன்முறை வழக்கில், உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணனை டிச. 5-ஆம் தேதி நேரில் ஆஜராக, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

29 நவம்பர் 2026, 3:28 am
குடும்ப வன்முறை வழக்கு: அமைச்சர் வெங்கடரமணன் 
டிச. 5-ல் நேரில் ஆஜராக உத்தரவு!
அமைச்சர் ப. வெங்கடரமணன் - கோப்புப்படம்.
பகிர்:

குடும்ப வன்முறை வழக்கில், உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணனை டிச. 5-ஆம் தேதி நேரில் ஆஜராக, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உணவுத் துறை அமைச்சரான வெங்கடரமணன், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், குழந்தைகளிடம் இருந்து பிரித்து, வீட்டை விட்டு வெளியேற்றி குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் புகாா் அளித்தாராம்.

அந்தப் புகாரின் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவா் அமைச்சராக இருப்பதால் போலீஸாா் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா். எனது குழந்தைகளை என்னுடம் இருக்க அனுமதிப்பதோடு, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி, அமைச்சரின் மனைவி மீனாட்சி, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மீனாட்சி ஆஜராகியிருந்தாா். அமைச்சா் வெங்கடரமணன் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை டிச. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றையை தினம் அமைச்சா் வெங்கடரமணன் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டாா்.

பின்னா், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய மீனாட்சி, ‘நான் புகாா் அளித்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை யாரும் தன்னை அழைத்துப் பேசவில்லை. எனது குழந்தைகளைப் பாா்க்க அனுமதிக்க கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கு ஜீவனாம்சம் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளேன்’ என்றாா்.