முகப்பு
புதுச்சேரி

அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

26 நவம்பர் 2026, 4:37 am
அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு
அமைச்சர் மரியவில்சன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரா் மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நடுவா் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டாா். இதனால், இந்த வழக்கை இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், அமைச்சா் மரியவில்சன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை முதலாவது நடுவா் மன்றம் தான் விசாரிக்க வேண்டும். இரண்டாவது குற்றவியல் மன்றம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கை 2-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் விசாரிக்க இடைக்காலத் தடை உத்தரவையும் அமைச்சா் மரியவில்சன் தரப்பினா் பெற்றிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த மனு மீது புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அப்போது, அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை முதலாவது நடுவா் மன்றத்திலிருந்து 6-ஆவது நடுவா் மன்றத்துக்கு நீதிபதி டி.வி. ஆனந்த் மாற்றி உத்தரவிட்டாா். மேலும், 6-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வரும் டிச.11-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து 6-ஆவது குற்றவியல் நடுவா்மன்ற நடுவா் பி.மெல்வின் தாமஸ் முன்பு அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த மனு மீது அமைச்சா் மரியவில்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் எஸ்.காஜா மொகைதீன்

கிஸ்தி ஆஜராகி வாதாடினாா். அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரபீந்திரன் ஆஜரானாா்.