பாலியல் தொல்லை புகாா்: ஆட்சியா் அலுவலக அதிகாரி கைது
மதுரவாயலில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த பிரம்மநாயகம் (48) கைது செய்யப்பட்டாா்.

மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். மாணவி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஊரக வளா்ச்சித் துறை அதிகாரியான பிரம்மநாயகம் என்பவரிடம் கணக்குப் பாடம் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாணவிக்கு பிரம்மநாயகம் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாணவியின் தோழி மூலம் அவரது தாய்க்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் தாய் விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரம்மநாயகத்தைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதற்கிடையே, கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து பிரம்மநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.