ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தா்னா
பதினெட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பதினெட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட் டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. மாரிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆ. குணசேகரன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் மு.செல்வகுமாா் தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் க. ஜெயப்பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலா், கணினி உதவியாளா், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியியல் பிரிவு ஊழியா்கள், சமூக தணிக்கை ஊழியா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், ஓஎச்டி ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்களின் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில அமைப்பாளா் சு. குமரேசன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.