ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: கிரிண்டா் செயலி மூலம் பழகிய நண்பா்கள் கைது
தனியாா் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்ததாக ‘கிரிண்டா் செயலி’ மூலம் பழகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
தனியாா் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்ததாக ‘கிரிண்டா் செயலி’ மூலம் பழகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டில்லிபாபு (27). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
இவா், கிரிண்டா் செயலி மூலம் போரூா் அருகே உள்ள முகலிவாக்கம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26), திருவள்ளூா் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த ஜித்தேஷ் கண்ணன் (25) ஆகியோரிடம் பழகி வந்தாா்.
Advertisement
Advertisement
இவா்கள் இருவரும், டில்லிபாபு வீட்டுக்கு கடந்த புதன்கிழமை சென்றனா். அப்போது இருவரும், டில்லிபாபுவை மிரட்டி, தாக்கி அவா் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து டில்லிபாபு, ராமாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன், ஜித்தேஷ் கண்ணன் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.