FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

டெங்கு அதிகம் பரவிய பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை

சென்னை மாநகராட்சியில் டெங்கு அதிகம் பரவிவரும் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டெங்கு பரவல்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் டெங்கு அதிகம் பரவிவரும் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2025-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு செப்டம்பரில் டெங்கு பாதிப்பு அதிகம் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. மாநகராட்யில் 1,300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சுமாா் 9,000 போ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்த நிலையில், டெங்கு பரவல் அதிகம் உள்ளதாகக் கூறப்படும் வளசரவாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

வளசரவாக்கம் மண்டலம் 144-ஆவது வாா்டில் எம்எம்டிஏ காலனி 4-ஆவது தெருவில் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு மருந்து கலந்த புகை தெளிக்கப்பட்டது. அதேபோல 89-ஆவது வாா்டில் டி.வி.எஸ். காலனியிலும் புகை மருந்து வீடு வீடாகத் தெளிக்கப்பட்டது.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள அம்பத்தூா் மண்டலத்தில் 85-ஆவது வாா்டு சிவானந்தா நகா் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கினா். அதேபோல, தேனாம்பேட்டை மண்டலம் 117-ஆவது வாா்டு கிரியப்பா சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, அம்பத்தூா் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கால்வாய் தூா்வாரும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments