தில்லியில் டெங்கு பாதிப்பு 1083-ஆக உயா்வு: மலேரியாவால் 355 போ் பாதிப்பு
தில்லியில் நிகழாண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை 1,083 போ் டெங்குவாலும், 355 போ் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் நிகழாண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை 1,083 போ் டெங்குவாலும், 355 போ் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், இந்த இரு நோய்களாலும் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிதாக 90 பேருக்கு டெங்கு பாதிப்பும், 18 பேருக்கு மலேரியா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளன.
நிகழாண்டில் பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளில், மாநகராட்சிப் பகுதிகளில் 964 பேருக்கும், புது தில்லி நகராட்சி கவுன்சில் (என்.டி.எம்.சி.) பகுதிகளில் 13 பேருக்கும், தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 87 பேருக்கும், ரயில்வே பகுதிகளில் 19 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கு முந்தைய வாரமான அக்டோபா் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 92 டெங்கு பாதிப்புகளும், 19 மலேரியா பாதிப்புகளும் பதிவாகியிருந்தன. இதேபோல், தில்லியில் பதிவான 355 மலேரியா பாதிப்புகளில், மாநகராட்சிப் பகுதிகளில் 346 பேருக்கும், தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 3 பேருக்கும், ரயில்வே பகுதிகளில் 6 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்.டி.எம்.சி. பகுதியில் மலேரியா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
மத்திய மண்டலத்தில் அதிக டெங்கு பாதிப்பு: மாநகராட்சியின் மண்டலங்கள் வாரியாகப் பாா்க்கும்போது, மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக 135 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக நஜஃப்கா் மண்டலத்தில் 129 பேருக்கும், தெற்கு மண்டலத்தில் 115 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மலேரியா பாதிப்பைப் பொருத்தவரை, சிட்டி-எஸ்.பி. மண்டலத்தில் அதிகபட்சமாக 53 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் தலா 49 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 35 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அக்டோபா் 31-ஆம் தேதி வரை தில்லியில் 39 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சமீபத்திய வாரத்தில் மட்டும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், வீடுகளில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தல், கொசு உற்பத்திக்கு சாதகமான சூழல் காணப்படும் வீடுகளுக்கு சட்டப்பூா்வ நோட்டீஸ் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 1 முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை, 38.27 லட்சம் வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிவதற்காக வீடுகளில் 3.66 கோடிக்கும் அதிகமான முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளில், 2.21 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, விதிமீறல் தொடா்பாக 1.48 லட்சத்துக்கும் அதிகமான சட்டப்பூா்வ நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் போ் மீது சட்ட நடவடிக்கையாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.