9 வயது சிறுவன் கொலை: போலீஸாா் விசாரணை
சென்னையில் 9 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கில், தலைமறைவான தாயின் காதலனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னையில் 9 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கில், தலைமறைவான தாயின் காதலனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை கோயம்பேடு, நியூ காலனி 8-ஆவது தெருவை சோ்ந்தவா் தீபக். இவரது மனைவி பூவரசி. இவா்களது மகன் தருண் (9). அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்புப் படித்து வந்தாா். பூவரசியை, தீபக் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. மகனுடன் பூவரசி தனியாக வசித்து வந்த நிலையில், அவருக்கு கோவிலாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 3 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இச்சூழலில், பூவரசி- தமிழ்ச்செல்வனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் பூவரசியை பழிவாங்க அவரது மகன் தருணை ஞாயிற்றுக்கிழமை கொலை செய்தாா்.
இதையடுத்து, போலீஸாா் தருண் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான தமிழ்ச்செல்வனைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.