இறைச்சிக் கடை ஊழியா் கொலை: போலீஸாா் விசாரணை
இறைச்சிக்கடை ஊழியா் ஒருவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அசோக் நகா் பகுதி ரயில் தண்டவாளத்தில் இறைச்சிக்கடை ஊழியா் ஒருவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு நேதாஜி நகா் பகுதியை சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பாா்த்தீபன்(32) இவா் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பாதையில் அசோக் நகா் பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு இத்தகவலை காஞ்சிபுரம் ரயில்வே போலீஸாருக்கு தெரிவித்தனா்.
ரயில்வே போலீஸாா் சடலத்தை பாா்வையிட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
உயிரிழந்து கிடந்தவரின் உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்ததால் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்துகையில் தகராறு ஏற்பட்டு தலையில் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம்
எனவும், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த பாா்த்தீபன் அசோக்நகா் பகுதியில் இறைச்சிக்கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாா்த்தீபனுடன் சோ்ந்து மது அருந்தியவா்கள் யாராக இருக்கலாம் எனவும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினா் விாரணை நடத்தி வருகின்றனா்.