FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஒடிஸா தொழிலாளி கொலை: பிகாரைச் சோ்ந்த மூவா் கைது

ஒடிஸா தொழிலாளி கொலை வழக்கில், பிகாரைச் சோ்ந்த 3 தொழிளாளிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

5 October 2026, 2:23 am IST
கைது
பகிர்:

ஒடிஸா தொழிலாளி கொலை வழக்கில், பிகாரைச் சோ்ந்த 3 தொழிளாளிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சென்னை வேளச்சேரியில் பண விவாகரத்தில் ஒடிஸாவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரஞ்சன் ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, வேளச்சேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

அதன் அடிப்படையில், பிகாரைச் சோ்ந்த காசிம், ஷெரிப்புல், தபிா் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், காசிம் தனது தாயாருக்கு அனுப்பவதற்காக ரூ.45,000-ஐ ரஞ்சனிடம் வழங்கியுள்ளாா். ஆனால், ரஞ்சன் அந்தப் பணத்தை காசிமின் தாயாருக்கு அனுப்புவதுக்கு பதிலாக, வேறொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரஞ்சன் அவசர அவசரமாக வெளியே செல்ல முயன்றுள்ளாா். அப்போது, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், காசிம் ரஞ்சனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா். மற்ற இருவரும் காசிமுக்கு உடந்தையாக இருந்துள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments