FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது பற்றி...

மின்சார ரயில் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் தடம் புரண்டதை அடுத்து, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டபோது, ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டது.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் - கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தாம்பரம், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை முடிந்து, வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர்.

தாம்பரம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்களின் பகுதிகளுக்கு செல்ல காலை முதலே புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகின்றது.

இந்த சூழலில், ரயிலின் பெட்டி தடம் புரண்டு முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், ரயிலின் பெட்டியைத் தண்டவாளத்தில் நிறுத்தி சரி செய்யும் பணிகளில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

summary

Tambaram-Beach electric train derails! Train services suspended!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments