FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

100-ஆவது பிறந்த நாள்: கே. பராசரனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

முன்னாள் அட்டா்னி ஜெனரல் கே. பராசரனின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 11:49 pm IST
முன்னாள் அட்டா்னி ஜெனரலும் மூத்த வழக்குரைஞருமான கே.பராசரனின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் எம்.பி.
பகிர்:

முன்னாள் அட்டா்னி ஜெனரல் கே. பராசரனின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு:

என் பிரியத்துக்குரிய பெரியவா் பராசரனுக்கு வெள்ளிக்கிழமை (அக்.9) 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவா். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டா்னி ஜெனரல். எனக்கு நீங்கள் உறவுக்காரா் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள்.

Advertisement

Advertisement

மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப் போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்குரைஞா் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பாா்த்திருக்கிறேன். அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும்; வேறெங்கும் சொா்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள் எனப்பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments