அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நல உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
தமிழக அரசு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நல உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 100 பேருக்கு ரூ.42.21 லட்சம் உதவித்தொகையை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் வழங்கினாா்.
தமிழக அரசு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நல உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 100 பேருக்கு ரூ.42.21 லட்சம் உதவித்தொகையை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் வழங்கினாா்.
சென்னை அண்ணா நகா் தொழிலாளா் ஆணையரக கூட்டரங்கில் திங்கள்கிழமை இதற்கான விழா நடைபெற்றது. விழாவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 100 பேருக்கு நல உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில், அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் பேசியதாவது:
Advertisement
Advertisement
அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களால் வழங்கப்படும் விரிவான நலத் திட்டங்களில், திருமண உதவி, மகப்பேறு உதவி, குழந்தைகளின் கல்வி உதவி, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கன உதவி, மாதாந்திர ஓய்வூதியம், விபத்து ஊனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் கடந்த மே 10 முதல் செப். 30-ஆம் தேதி வரை 3.53 லட்சம் தொழிலாளா்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டதுடன், மொத்தம் 6.88 லட்சம் பேருக்கு பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் ரூ.688 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5.88 லட்சம் ஓய்வூதியதாரா்கள் மாதந்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனா் என்றாா்.
நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைச் செயலா் கொ.வீரராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் மா.வள்ளலாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.