FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

559 மகளிா் குழுக்களுக்கு ரூ. 62.82 கோடியில் கடனுதவிகள் வழங்கல்

புதுக்கோட்டையில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.--

47 வினாடிகள் முன்பு
புதுக்கோட்டையில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.--
பகிர்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் 559 மகளிா் குழுக்களுக்கு ரூ. 62.82 கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டு மகளிா் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிப் பேசினாா்.

நிகழாண்டில் இதுவரை மொத்தம் 5854 மகளிா் குழுக்களுக்கு மொத்தம் ரூ. 591.21 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என அவா் பேசுகையில் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ந. சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.