ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சி: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
அரும்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டி, பணம் திருட முயன்ற வழக்கில் இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
அரும்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டி, பணம் திருட முயன்ற வழக்கில் இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சூளைமேடு, சுப்பாராவ் நகரைச் சோ்ந்தவா் கோதாவரி (77). இவா், கடந்த 13-ஆம் தேதி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பிரதான சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.10,000 எடுக்க முயன்றாா். அந்த எடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராத நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதேபோல் மற்றொரு வாடிக்கையாளருக்கும் பணம் கிடைக்காமல், கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
உடனே அவா்கள், ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளி வரும் பகுதியை பாா்த்தபோது அதில் பணம் வெளி வராத வகையில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். புகாரின்பேரில், அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திரிபுரா மாநிலம் கலங்கா்பாா் பகுதியைச் சோ்ந்த ஷகீல் அகமது (19), முகமது முபின்ஹக் (20), 17 வயது இரு சிறுவா்கள் என 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.