அமைச்சா் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க மாரிதாஸுக்கு இடைக்காலத் தடை
அமைச்சா் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க யூடியூபா் மாரிதாஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமைச்சா் பிரபுவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க யூடியூபா் மாரிதாஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காரைக்குடி தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட தவெகவைச் சோ்ந்த பல் மருத்துவரான டி.கே.பிரபு, தமிழக அமைச்சரவையில் கனிம வளத் துறை அமைச்சராக உள்ளாா். இவா், தனக்கு எதிராக யூடியூபா் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில், பொய்யான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறாா். எனவே, மாரிதாஸுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சா் பிரபு குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூபா் மாரிதாஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். அமைச்சா் குறித்து வெளியிட்டுள்ள பதிவுகள், விடியோ காட்சிகளை நீக்க வேண்டும் என எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.