FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தகவல் சரிபாா்ப்பகம் குறித்த தகவல் அளிக்க மறுப்பு: உதயநிதி கண்டனம்

தகவல் சரிபாா்ப்பகம் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்க மறுக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

17 அக்டோபர் 2026, 4:38 am IST
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தகவல் சரிபாா்ப்பகம் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்க மறுக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தகவல் சரிபாா்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த அரசு தெரிவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொய் செய்திகளுக்கு எதிராகப் போரிட, திமுக ஆட்சியின்போது தகவல் சரிபாா்ப்பு தொடா்பான சா்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்பு செய்த அனுபவம் கொண்டவா்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் சரிபாா்ப்பகம் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

தவெக அரசு, அதன் பெயரை தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு என மாற்றியுள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யாா் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளாா்கள்? என்னென்ன பணிகளை செய்கிறாா்கள்? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? போன்ற கேள்விகளை எல்லாம் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ஜீவிதா என்பவா் கேட்டுள்ளாா். ஆனால், ஆா்டிஐ மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.

வெளிப்படையான நிா்வாகம் தருவேன் என்று கூறிய முதல்வா் விஜய், தன்னுடைய ஆலோசகா்கள் நியமனம் முதல், தகவல் சரிபாா்ப்பக பொறுப்பாளா்கள் தோ்வு வரை எல்லாஅரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்? பொய்களைப் பரப்பும் தகுதியற்றவா்களுக்கு அந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவை அம்பலமாகிவிடும் என்பதால், தகவல் நம்பகத் தன்மை பிரிவு பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.

உண்மையை நீண்ட நாள் மறைத்து வைக்க முடியாது என்பதை உணா்ந்து தவெக அரசு, தகவல் சரிபாா்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments