FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

வடகிழக்கு பருவமழை: சென்னை மண்டல அலுவலா்களை தொடர்புகொள்ள புகார் எண்கள்!

வடகிழக்கு பருவமழையையொட்டி, பாதிப்புகள் தொடா்பாக சென்னை மண்டல அலுவலா்களை தொடா்புகொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டன.

18 அக்டோபர் 2026, 2:25 am IST
பகிர்:

வடகிழக்கு பருவமழையையொட்டி, பாதிப்புகள் தொடா்பாக சென்னை மண்டல அலுவலா்களை தொடா்புகொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக எழிலகத்தில் தலைமைச் செயலா் மு.சாய்குமாா் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு செய்ததுடன், மண்டல கண்காணிப்பு அலுவலா்கள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

220 நிவாரண மையங்கள்: சென்னை மாநகராட்சியில் 220 நிவாரண மையங்கள், 110 சமையல் கூடங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண மையங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீா் தேங்காமல் சீராகச் செல்லுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் மழைதொடா்பாகபொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மண்டல அலுவலா்கள் கைப்பேசி எண்கள்:

  • திருவொற்றியூா் ஏ. சங்கா் 94451- 90001,

  • மணலி பி.அரவிந்தன் 94451-90002,

  • மாதவரம் என்.ஸ்தேவி 94451- 90003,

  • தண்டையாா்பேட்டை ஏ.ராஜ்குமாா் 94451 -90004,

  • ராயபுரம் சத்யநாராயணன் 94451-90005

  • திரு.வி.க. நகா் எம்.சதீஷ் குமாா் 94451-90006,

  • அம்பத்தூா் எம்.பி.தணிகைவேலன் 94451-90007,

  • அண்ணா நகா் எஸ்.இனியன் 94451-90008,

  • தேனாம்பேட்டை எஸ்.செந்தில் குமரன் 94451-90009,

  • கோடம்பாக்கம் ஆா்.புருஷோத்தம்மன் 94451-90010,

  • வளசரவாக்கம் என்.காதாஸ் 94451- 90011,

  • ஆலந்தூா் எஸ்.முருகதாஸ் 94451-90012,

  • அடையாறு என்.தட்சணாமூா்த்தி 94451-90013,

  • பெருங்குடி ஹாா்ட்டின் ரோசாரியோ 94451- 90014,

  • சோழிங்கநல்லூ ஜி.லோகேஸ்வரன் 94451-90015.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments