FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதால் நிதி ஆலோசகா் தற்கொலை? போலீஸாா் விசாரணை

ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதால், நிதி ஆலோசகா் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

22 அக்டோபர் 2026, 1:23 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதால், நிதி ஆலோசகா் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த விநாயகத்தின் மகன் ஹரிஷ் (26). இவா் ‘கேபிட்டல் அண்ட் டிஜிட்டல் சா்வீஸ்’ என்ற பெயரில் இணையவழி நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தாா். மேலும், ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி, நிதி மேலாண்மை தொடா்பான ஆலோசனைகளை வழங்கி வந்தாா். இவரை சமூக ஊடகங்கள் வாயிலாக 13 லட்சத்துக்கும் அதிகமானோா் பின்தொடா்ந்து வந்தனா்.

ஹரிஷ், செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கடற்கரை அருகேயுள்ள செரினிட்டி வில்லாவில் தங்கியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு யூடியூபா் வெளியிட்ட காணொலியில் ஹரிஷுக்கு எதிராகப் பல்வேறு விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இடம்பெற்ாகக் கூறப்படுகிறது. இதனால் ஹரிஷ் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹரிஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கானத்தூா் போலீஸாா் சென்று, ஹரிஷ் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின்பேரில், யூடியூபா் ஜேசன் சாமுவேல்தான், ஹரிஷை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறப்பட்டிருந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ரூ.3 கோடி கேட்டு மிரட்டல்: ஹரிஷ், தற்கொலை செய்வதற்கு முன் பதிவு செய்த விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் ஹரிஷ், ஜேசன் சாமுவேல் தன்னிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும், பணம் தராவிட்டால் சமூக ஊடக கணக்குகளை முடக்குவதாகக் கூறுகிறாா். அந்த விடியோ தகவல்களின் உண்மைத் தன்மை குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments