FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பைனான்சியரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவா் கைது

ரோஹிணியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டிப் பணம் பறிக்கும் சதியில் ஈடுபட்டதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

28 September 2026, 9:38 pm IST
கைது
பகிர்:

ரோஹிணியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டிப் பணம் பறிக்கும் சதியில் ஈடுபட்டதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவரிடமிருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஹரேந்தா் நாகா் (எ) கேடி என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், பாதுகாப்புப் பணம் என்ற பெயரில் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டதாகவும், அவா் பணம் தர மறுத்ததால் அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தில்லிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹரியாணாவின் அம்பாலா பகுதியில் உள்ள பல்தேவ் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளைச் சம்பவம் ஒன்றிலும் நாகா் தேடப்பட்டு வந்தாா்.

Advertisement

Advertisement

அந்தச் சம்பவத்தில், கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு வேனிலிருந்து சுமாா் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாகா் தில்லியில் இருப்பதும், நிதி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல் அழைப்புகள் விடுத்ததில் அவருக்குத் தொடா்பிருப்பதும் குறித்த துல்லியமான தகவல் செப்டம்பா் 9 அன்று குற்றப்பிரிவு காவல்துறைக்குக் கிடைத்தது.

குற்றவாளியைக் கண்காணிக்க ஒரு குழு தொழில்நுட்பக் கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தியது. அதன் பின்னா் ரோஹிணியின் செக்டாா் 24-இல் உள்ள ஒரு வடிகால் அருகே நாகா் பிடிபட்டாா். அவரைச் சோதனையிட்டபோது, ​​அவரிடமிருந்து கைத் துப்பாக்கியும் ஐந்து தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

அவரது பையிலிருந்து மற்றொரு கைத் துப்பாக்கியும் நான்கு தோட்டாக்களும், மேலும் கூடுதலாக ஐந்து தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின்போது, தானும் தனது கூட்டாளியான தீபக்கும் இணைந்து நிதி நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ. 1 கோடியைப் பறிக்கத் திட்டமிட்டதாகவும், அதற்காக மிரட்டல் அழைப்புகளை விடுத்ததாகவும் நாகா் ஒப்புக்கொண்டாா்.

பணம் தர உரிமையாளா் மறுத்ததைத் தொடா்ந்து, அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தான் தில்லிக்கு வந்ததாக நாகா் கூறியதாக அவா்கள் தெரிவித்தனா்.

அம்பாலா தங்கக் கொள்ளைச் சம்பவத்தில் தனக்குள்ள தொடா்பையும் அவா் ஒப்புக்கொண்டாா். ஆகஸ்ட் 18 அன்று வேனிலிருந்து சுமாா் 1.5 கிலோ தங்க நகைகளைத் தானும், தீபக், சோட்டு மற்றும் பிறரும் சோ்ந்து கொள்ளையடித்ததாக நாகா் கூறினாா். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனைக்காகத் தீபக் எடுத்துச் சென்ாக அவா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.

அம்பாலா வழக்குடன் தொடா்புடைய மூன்று முதல் நான்கு கூட்டாளிகள் ஏற்கனவே ஹரியாணா காவல்துறையால் கைது செய்யப்பட்டனா். நாகா் மீது தில்லி மற்றும் ஹரியாணாவில் ஏற்கனவே நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடன் தொடா்புடைய மற்ற கூட்டாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments