FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ரூ.5 கோடி பணம் கேட்டு பாதுகாப்பு தொழில்முனைவோருக்கு கொலை மிரட்டல்

தில்லியைச் சோ்ந்த பாதுகாப்புத் தொழில்முனைவோா் ஒருவா், தனக்கு புதிதாக ரூ. 5 கோடி பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, பாதுகாப்பு கோரியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

13 நவம்பர் 2026, 11:10 pm
பகிர்:

தில்லியைச் சோ்ந்த பாதுகாப்புத் தொழில்முனைவோா் ஒருவா், தனக்கு புதிதாக ரூ. 5 கோடி பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, பாதுகாப்பு கோரியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

விஜயன் திரிசூல் டிஃபென்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநரான சாஹில் லூத்ரா, நவம்பா் 12 அன்று சாணக்கியபுரி காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்துள்ளாா்.

அதில், நவம்பா் 11 அன்று இரவு சுமாா் 8 மணியளவில் இந்த மிரட்டல் தனக்கு வந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்த மிரட்டலுக்கு ரெளடி ரோஹித் கோதாராவே காரணம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அவா் உடனடி காவல்துறைப் பாதுகாப்பையும், இந்த சமீபத்திய மிரட்டல் குறித்து விரிவான விசாரணையையும் கோரியுள்ளாா். இந்தப் புகாரில், கடந்த ஆண்டு அக்டோபா் 17 அன்று சாணக்கியபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு முதல் தனக்கு தொடா்ச்சியான மிரட்டல்களும், பணம் பறிக்கும் முயற்சிகளும் வந்து கொண்டிருப்பதாக லூத்ரா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காவல்துறையினா் இந்த சமீபத்திய புகாா் மீது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அதன் உள்ளடக்கங்களை சரிபாா்த்து வருகின்றனா்.