FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடியில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 3:50 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

போடியில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சா்ச் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி சத்யா (30). இவருக்கும் போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ரஞ்சித்குமாருக்கும் 8 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது.

கடந்த ஓராண்டாக இவா்கள் பழக்கத்தை துண்டித்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ரஞ்சித்குமாா் கடந்த 6- ஆம் தேதி சத்யாவுக்கு கைப்பேசியில் பேசினாா். இதை சத்யா கண்டித்ததுடன் ரஞ்சித்குமாா் மனைவி பவித்ராவிடமும் கூறினாா்.

இந்த நிலையில் பவித்ரா (30), இவரது தாயாா் சாந்தி, ரஞ்சித்குமாரின் தந்தை கண்ணன் ஆகியோா் சத்யா வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த சத்யா போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பவித்ராவைக் கைது செய்தனா்.