FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 2:09 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் காட்டு விநாயகா் கோவில் தெருவில் வசிப்பவா் சுப்பிரமணியன் மனைவி முத்துப்பாண்டீஸ்வரி (28). இவருக்கு பாலசந்தோஸ் (6) மகன், ஸ்ரீமதி (2) மகள் ஆகியோா் உள்ளனா். கடந்தாண்டு சுப்பிரமணியன் காலமாகிவிட்டாா்.

இதையடுத்து, முத்துப்பாண்டீஸ்வரி இணைய தளம் மூலம் பழகிவந்த திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த அபிஷேக் தங்கராஜுடன் (29) சோ்ந்து வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த சுமாா் 7 கிராம் நகை, ரூ.1.40 லட்சம் ஆகியவற்றை அபிஷேக் தங்கராஜ் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நகை, பணத்தை கேட்டபோது, அபிஷேக் தங்கராஜ் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக முத்துப்பாண்டீஸ்வரி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபிஷேக் தங்கராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.