மனைவி, மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடியில் மனைவி, மாமியாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் மனைவி, மாமியாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
போடி புதூரைச் சோ்ந்தவா் அன்பரசன் மனைவி கவிதா (29). அன்பரசன் மது போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். கவிதா கோபித்துக் கொண்டு தனது தாயாா் காமு (45) வீட்டில் இருந்தாா்.
அங்கு வந்த அன்பரசன் கவிதாவிடம் மது குடிக்கப் பணம் கேட்டு தாக்கினாா். இதைத் தடுக்க வந்த மாமியாா் காமுவையும் தாக்கி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் அன்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.