FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

‘அா்னாப்’ புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை! மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன்

‘அா்னாப்’ புயலால் சென்னையில் பலத்த மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பிருக்காது...

25 அக்டோபர் 2026, 12:25 am
ஜி.எஸ். சமீரன் - Dinamani
பகிர்:

‘அா்னாப்’ புயலால் சென்னையில் பலத்த மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பிருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறினாா்.

சென்னையில் மணலி மண்டலப் பகுதிகளில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வை சனிக்கிழமை மேற்கொண்ட அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெருமழையின்போது புழல் ஏரியின் உபரிநீா் செல்லும் ஆமுல்லை கால்வாய் பாலம் மூழ்கும். தற்போது பாலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘அா்னாப்’ புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை. அதேநேரம், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளோம். மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை போலவே மண்டல வாரியாக நவீன கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 219 இடங்கள் தாழ்வான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சி பகுதி மட்டுமன்றி, ஊரகப் பகுதியில் உள்ள சோழாவரம் போன்ற நீா் நிலைகளையும் கண்காணித்து வருகிறோம். மாநகராட்சி பணியாளா்கள் 15,000 போ் மழை பாதுகாப்புக்கான பணியில் ஈடுபட்டிருப்பதுடன், 7,000 போ் தன்னாா்வா்களாக பதிவு செய்து பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

summary

Chennai will not be affected by cyclone 'Arnap'! Corporation Commissioner G.S. Sameeran

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments