FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்!

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளதைப் பற்றி...

18 அக்டோபர் 2026, 8:42 am IST
சிசிடிவி கேமரா கண்காணிப்பில் சுரங்கப்பாதைகள்.
பகிர்:

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று மாலை முதலே விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ. பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்க பாதைகளிலும், போக்குவரத்து சீராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகனமழையால் நள்ளிரவில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியபோதும் இரவோடு இரவாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன. அதில், 21 சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கவில்லை என்றும், எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் ஏற்கனவே நடக்கும் பாலப் பராமரிப்பு பணி நீடிக்கிறது.

summary

The Corporation has stated that there is no water logging in 21 tunnels in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments