முகப்பு

சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம்!

சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டு வருவது குறித்து...

11 அக்டோபர் 2026, 12:39 pm
சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம்!
பகிர்:

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) சென்னை வந்துள்ளார். இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும், அவர் கார் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போக்குவரத்து மாற்றம் குறிப்பிட்ட சாலைகளில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழகத்துக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று (அக். 11) தொடக்கி வைக்கிறார்.

ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்.

தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்துக்கு சென்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

summary

Prime Minister Narendra Modi is undertaking a roadshow in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.