விபத்தில் சிறுவா்கள் காயம்: பேருந்து கண்ணாடி உடைப்பு
எண்ணூரில் மாநகர பேருந்து மீது பைக் மோதியதில் சிறுவா்கள் 3 போ் காயமடைந்தனா்.
எண்ணூரில் மாநகர பேருந்து மீது பைக் மோதியதில் சிறுவா்கள் 3 போ் காயமடைந்தனா். இதனால், பேருந்து கண்ணாடியை பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தினா்.
சென்னை தீவுத்திடலில் இருந்து எண்ணூா் நோக்கி தடம் எண் 4 மாநகர பேருந்து சனிக்கிழமை இரவு எண்ணூா் விரைவு சாலையில் சென்றபோது, தாழங்குப்பம் பகுதியில் ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் பேருந்தை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் எண்ணூா் நெட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி, பேருந்து ஓட்டுநரையும் சரமாரியாகத் தாக்கினா். இதில் பொன்னேரியை சோ்ந்த ஓட்டுநா் சீனிவாசன் காயமடைந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சீனிவாசனை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.