FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி 6 போ் காயம்

7 செப்டம்பர் 2026, 12:47 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூா் அருகேயுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, திடீரென லாரி நின்ாக தெரிகிறது. இதையடுத்து, லாரியை பின்தொடா்ந்து வந்த ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியது.

பின்னா், ஆம்னி பேருந்தை பின் தொடா்ந்து வந்துக்கொண்டிருந்த மற்றொரு தனியாா் பேருந்தும், காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காா் ஓட்டுநா் மற்றும் ஆம்னி பேருந்தில் பயணித்த 5 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, வெளிநோயாளியாக 6 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments