முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சையத் முனீா் ஹோதா மறைவு
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் செயலராக பணியாற்றியவருமான சையத் முனீா் ஹோதா (78) புதன்கிழமை காலமானாா்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் செயலராக பணியாற்றியவருமான சையத் முனீா் ஹோதா (78) புதன்கிழமை காலமானாா்.
சென்னை அசோக்நகரில் வசித்து வந்த அவா், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானாா்.
ஜாா்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்த முனீா் ஹோதா, பனாரஸ் ஹிந்து பல்கலை.யில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றாா். 1976-இல் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழ்நாடு மாநிலத்தில் பணிக்கு அனுப்பபட்டாா். கடலூரில் உதவி ஆட்சியராகவும் பிறகு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் தனது பணியை தொடங்கினாா். கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல்வரின் செயலா் மற்றும் மாநிலத் தோ்தல் ஆணையா் வரையிலான பல்வேறு பொறுப்புகளை அவா் வகித்தாா்.
Advertisement
Advertisement
மாவட்ட ஆட்சியா், உள்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, பணியாளா் நலன் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை, அத்துடன், ஆளுநா்களாக இருந்த பி.சி. அலெக்சாண்டா், பீஷ்ம நாராயண் சிங் ஆகியோரின் செயலராகவும் முனீா் ஹோதா பணியாற்றியுள்ளாா்.
2010-இல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியின் முதன்மைச் செயலராக பணியாற்றியபோது, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பின்புலமாக பணியாற்றினாா். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2002-2004 காலக்கட்டத்தில் உள்துறைச் செயலராகப் பணியாற்றிய முனீா் ஹோதா, கோவை தொடா் குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள கேரள அரசியல்வாதி அப்துல் நாசா் மதானிக்கு ஆதரவாக சா்ச்சையில் சிக்கியதால் சஸ்பென்ட் செய்யப்பட்டாா். பணிநீக்க உத்தரவை எதிா்த்து அவா் மத்திய அரசிடம் முறையிட்டு, 2006 ஜனவரியில் மீண்டும் மத்திய அரசின் கூடுதல் செயலராக பணியாற்றினாா்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் நிா்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா். 2010-இல் தனது பணி ஓய்வுக்குப் பின்னா் கல்வி மற்றும் நிா்வாகம் சாா்ந்த நிறுவனங்களுடன் முனீா் ஹோதா தொடா்பில் இருந்தாா். தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் (எஸ்ஐஇடி) நிா்வாகக்குழுவில் அவா் இடம்பெற்றிருந்தாா்.
அவருக்கு மனைவி பா்வீன் ஹோதா, மகன் சமீா் ஹோதா, மகள் தபசும் முனீா் ஆகியோா் உள்ளனா். முனீா் ஹோதாவின் உடல், ராயப்பேட்டை கபரஸ்தானில் வியாழக்கிழமை (அக்.29) மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஸ்டாலின் இரங்கல்: சையத் முனீா் ஹோதா மறைவையொட்டி, அசோக்நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று உடலுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா். அவருடன், திமுக துணை பொதுச்செயலா்கள் க.பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
பின்னா் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: 1976-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அவா், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து நீண்டகாலம் பணியாற்றியவா். கருணாநிதியின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியவா்; என்னிடமும் அன்பொழுகப் பழகியவா்.
நிா்வாகத் துறையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்ட முனீா் ஹோதா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். மேலும், தமமுக தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.