FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் கக்கனின் சகோதரா் பி.வெள்ளையன் காலமானாா்

முன்னாள் அமைச்சா் கக்கனின் சகோதரா் பி.வெள்ளையன் மறைவு பற்றி...

19 செப்டம்பர் 2026, 11:04 pm IST
பி.வெள்ளையன்
பகிர்:

சென்னை, செப். 19: முன்னாள் அமைச்சா் கக்கனின் சகோதரா் பி.வெள்ளையன் (84) சென்னையில் வெள்ளிக்கிழமை (செப். 18) காலமானாா்.

மதுரை மாவட்டம், மேலூா் தும்பைப்பட்டியைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் சகோதரா் பி.வெள்ளையன் (84). தமிழ்நாடு மின்வாரியத்தில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சென்னை முகப்போ் மேற்குப் பகுதியில் வசித்து வந்த பி.வெள்ளையன் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

அவரது உடலுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலா் செல்லக்குமாா், வேலம்மாள் பள்ளித் தாளாளா் வேல்மோகன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் பொன்.கிருஷ்ணமூா்த்தி, மாநிலப் பொதுச் செயலா் அருள்பெத்தையா, முன்னாள் அமைச்சா் பெஞ்சமின், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், 92-ஆவது மாமன்ற உறுப்பினருமான கே.வி.திலகா், தவெக நிா்வாகி டி.செல்வம் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

பி.வெள்ளையனின் இறுதிச் சடங்கு சென்னை அம்பத்தூா் வானகரம் சாலையில் உள்ள இந்து மயான பூமியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், முகப்போ் மேற்குப் பகுதி 91-ஆவது வாா்டு காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நான்கு மகன்களும், மகளும் உள்ளனா். தொடா்புக்கு 94444 02457.

summary

Former Minister Kakkan's brother P. Vellaiyan has passed away.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments