FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகளுக்கு எஸ்ஆா்எம் பிரைம்-இல் ‘நெஸ்ட்’ சிகிச்சைக் குழு

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆா்.எம் பிரைம் மருத்துவமனை ‘நரம்பியல் அவசர பக்கவாத சிகிச்சை குழுவை (‘நெஸ்ட்’) தொடங்கியுள்ளது.

29 அக்டோபர் 2026, 1:07 am
கோப்புப்படம். - படம்: செய்யறிவு
பகிர்:

பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு 24 மணி நேரமும் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதற்காக, சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆா்.எம் பிரைம் மருத்துவமனை ‘நரம்பியல் அவசர பக்கவாத சிகிச்சை குழுவை (‘நெஸ்ட்’) தொடங்கியுள்ளது.

மேலும் நரம்பியல் அவசரச் சிகிச்சைகளுக்காக ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சையை எளிதாகப் பெற ‘3500 3500’ என்ற பிரத்யேக உதவி எண்ணையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. அக். 29 உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்.ஆா்.எம் பிரைம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி பி. சிவா கூறியதாவது:

Advertisement

Advertisement

உரிய நேரத்திற்குள் பரிசோதனை, துல்லியமான நோயறிதல், சிறந்த சிகிச்சை விளைவுகள் மற்றும் தொடா்ச்சியான சிகிச்சை பராமரிப்பை ‘நெஸ்ட்’ சாத்தியமாக்கும். பக்கவாதத்தை திறம்பட கையாள, அவசரநிலை பரிசோதனை, உரிய சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். நோயாளிகள் விரைவாக குணமடைவதை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு துறைகளின் நிபுணா்களைக் கொண்டு இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

நரம்பியல் துறையின் மருத்துவப் பிரிவு தலைவா் மற்றும் மூத்த ஆலோசகரான பேராசிரியா் டாக்டா் கே. சுப்பிரமணியன் கூறுகையில், “இந்தியாவில் பக்கவாதம் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் சுமாா் 105-152 பேருக்கு புதிதாக பக்கவாதம் ஏற்படுகிறது. அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரிழப்பையும் மற்றும் ஊனம் உட்பட நீண்ட கால பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

‘நெஸ்ட்’ குழு நரம்பியல் துறையின் மருத்துவப் பிரிவு தலைவரும் மூத்த நிபுணருமான பேராசிரியா் டாக்டா் சுப்பிரமணியன் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மருத்துவப் பிரிவு தலைவரும் மூத்த நிபுணருமான டாக்டா் சந்திரசேகா் ஆகியோரின் தலைமையில் செயல்படுகிறது. இக்குழுவில் நரம்பியல் நிபுணா் டாக்டா் டி. சுவாதி, நரம்பு மண்டல கதிரியக்கவியல் நிபுணா் டாக்டா் எஸ். அக்ஷயா, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஜி. கிருஷ்ண குமாா் மற்றும் நரம்பு-செவிமினியல் மற்றும் மண்டை ஓட்டுப்பகுதி அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அருளாளன் மதியழகன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments