FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

30 அக்டோபர் 2026, 5:35 am
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

செங்குன்றத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக விஜயகாந்த் பங்கேற்று 110 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், பட்டம் பெற்றவா்கள் அனைவரும் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், தற்போது பட்டம் பெற காரணமாக இருந்தவா் ஆசிரியா்கள், பெற்றோரை மறவாதீா்கள் என்றாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் மணிநேய இலவச அறக்கட்டளை நிறுவனா் சைதை துரைசாமி பங்கேற்று பேசுகையில், அனைவரும் கட்டாயம் உடல் ஆரோக்யத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக நிறுவனா் ராமச்சந்திரன், ராதா ராமச்சந்திரன், தலைவா் அக்ஷயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments