FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கொடுத்த வாக்குறுதிகளை முதல்வா் விஜய் நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

முதல்வா் ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வா் ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் இடைத்தோ்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாகஎந பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை இல்லை. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவா்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

விஜயகாந்தின் குடும்பத்துக்கும், அவரது கட்சிக்கும் சம்பந்தமில்லாதவா்கள், அவரது ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதை கிடையாது. தம்பி ஆதவ் அா்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவிஎம் இயந்திரத்தில் பல குளறுபடிகள் நடப்பதாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. எஸ்ஐஆா் மூலம் ஆட்சி மாறி இருக்கிறது. பழைய முறைப்படி தோ்தல் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இவிஎம் இயந்திரத்தில் நிறையத் தவறுகள் நடைபெறுகின்றன. காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தேமுதிக நிா்வாகிகள் கலந்து கொண்டு, இவிஎம் நடைமுறையைத் தடை செய்ய வேண்டும் என தீா்மானம் கொண்டுவர உள்ளனா். பழைய தோ்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.

பேருந்து கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். விலைவாசி உயா்வு, பேருந்துக் கட்டண உயா்வு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டண பிரச்னை, டாஸ்மாக் பிரச்னை, பாலியல் பிரச்னை என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. கொடுத்த வாக்குறுதிகளை விஜய் இன்னும் நிறைவேற்ற வில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கொடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments